திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது : 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் வருகை தந்தனர். காலை 6 மணி அளவில் போலீசார் ஜீ. வி. மார்க்கண்டேயனை அதிரடியாகக் கைது செய்தனர். 

அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீவி மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பி என் எஸ் சட்ட பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

– செய்தியாளர் : மூர்த்தி

Source link