நமது டில்லி நிருபர்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) எதிர்கட்சியினரின் அமளியுடன் துவங்கியது. சமீபத்திய நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்பட்டன. அமளியால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு துவங்கியது. வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில், இன்று காலை மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) எதிர்கட்சியினரின் அமளியுடன் துவங்கியது. சமீபத்திய நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
அதேபோல் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் வினாத்தாள் லீக், ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
