பீஜிங்: சீனாவில் மூதாட்டியை பயமுறுத்தியதாக, உலகிலேயே முதல்முறையாக ரோபோ ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் மக்காவ் நகரில், கடந்த 12ம் தேதி இரவு, 70 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் மொபைல் போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார்.
திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தபோது, மனித உருவ ரோபோ மாடல் ஒன்று நெருக்கமாக நின்றிருந்தது.
இதைக் கண்டு பயத்தில் அலறிய அந்த மூதாட்டி, ரோபோவை நோக்கி கோபமாக திட்டினார். ‘உன்னால் என் இதயமே நின்றுபோனது’ என அந்த மூதாட்டி திட்ட, பதிலுக்கு ரோபோவும் அவரிடம் ஏதோ பேசியது.
இதனால் அங்கு கூட்டம் கூடவே போலீசார் விரைந்து வந்து ரோபோவை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு போலீஸ் அதிகாரி ரோபோவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பின்னர் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். உடல் ரீதியாக காயம் ஏதும் இல்லை என்றாலும், பயத்தால் இரவு முழுதும் அங்கேயே தங்க வைக்கப்பட்டார்.
