இந்த நிலையில், 3-வது குழந்தை பெறவும் பேறுகால விடுப்பு அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் அரசு ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் கடந்த ஜன.21-ம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்:
உச்ச நீதிமன்றம் கடந்த 2025 மே 23-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘‘விடுப்பு வழங்குவதற்கான குழந்தைகள் பெறும் உச்ச வரம்பை நிர்ணயிக்க கூடாது. 3-வது குழந்தைக்கு வேண்டுமானால், தேசிய அளவில் 26 வாரங்கள் பேறுகால விடுப்பு என்பதை 12 வாரமாக குறைக்கலாம். பிரசவ தேதிக்கு 6 வாரம் முன்பாக விடுப்பு அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
