ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்துடன் நடைபெற்று, தொடர்ந்து சீரான உயர்வை சந்தித்து, நாளின் இறுதியில் 196 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி 100’ குறியீடு குறைந்தபட்சமாக 0.86 சதவீத ஏற்றத்துடனும்; ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு அதிகபட்சமாக 2.68 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மெட்டல்’ குறியீடு அதிகபட்சமாக 0.10 சதவீத இறக்கத்துடனும்; ‘நிப்டி மீடியா’ குறியீடு அதிகபட்சமாக 3.35 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,326 பங்குகளில், 2,537 ஏற்றத்துடனும்; 705 இறக்கத்துடனும், 84 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. தற்போதைய டெக்னிக்கல் சூழலின் படி 24,100–24,200 வரையில் தற்போது நடைபெறும் டெக்னிக்கல் புல்பேக் செல்லக்கூடும். தவிர 24,200-க்கு கீழே இருக்கும் வரை, இறக்கம் எந்த நேரத்திலும் வந்து போக வாய்ப்புள்ளது என்ற நிலைமையே இருக்கும். செய்திகள் சாதகமாக இல்லாது போய் இறக்கம் வந்தால், 23,300-ல் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

