பிரதான சுற்றில் ஆகர்ஷி * ஆர்லியன்ஸ் பாட்மின்டனில்…

ஆர்லியன்ஸ்: வடக்கு, மத்திய பிரான்சில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தகுதிச்சுற்றில் ‘நம்பர்-3’ அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீயான்ஷியை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 3 நிமிடம் நடந்த போட்டி முடிவில், ஆகர்ஷி 21-19, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் ஆகர்ஷி, தென் கொரியாவின் லீ யு சுவானை சந்தித்தார். முதல் செட்டை 21-17 என கைப்பற்றினார் ஆகர்ஷி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், 21-19 என வென்றார். 43 நிமிடம் மட்டும் நடந்த போட்டியில் ஆகர்ஷி, 21-17, 21-19 என நேர் செட்டில் வெற்றி பெற்று, பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி, 12-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் தோல்வியடைந்தார்.

Source link