காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியிலும் தொடருமா? புதுவை காங்கிரஸ் எம்.பி பதில்

புதுச்சேரியில் திமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து ஆட்சி ஆட்சி அமைக்குமா என்பது குறித்து புதுச்சேரி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் வினாத்தாள் கசிவு ஏராளமான இடங்களில் நடந்துள்ளது நடப்பு ஆண்டு மட்டும் 25 குழந்தைகளை இழந்துள்ளோம். பயிற்சி மையங்கள் கொள்ளை அடிக்கின்றன. 

நீட் வினாத்தாள்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தோருக்கு அதிகமாக கிடைக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதுடன் விசாரணை கமிஷன் அமைக்க கோருவோம்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை முழுமையாக திறந்து அரிசி  விநியோகம் சரியாக நடக்க வேண்டும். தற்போதுள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டும். மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறார்கள். இதற்கான தொகையை பயனீட்டாளர்களிடம் வசூலிக்க உள்ளார்களா.? மின்துறையை தனியாரிடம் தரப்போகிறார்களா என்பதை முதல்-அமைச்சர் தெரிவிக்க வேண்டும். புஷ்கரணி விழா தனியாரிடம் தர முதல் நடவடிக்கை எடுக்கிறீர்களா என்பதற்கு கவர்னர் பதில் வேண்டும்.

புஷ்கரணி விழா புதுச்சேரி திருக்காஞ்சியில் கொண்டாட வேண்டும். இங்கு நடத்தாமல் ஏனாமில் கொண்டு செல்கிறார்கள். இதற்காக மத்திய அரசு ஒதுக்குவதாக தெரிவித்துள்ள 48 கோடியை புதுச்சேரியில்பயன்படுத்த வேண்டும். திருக்காஞ்சியில் ரூ. 200 கோடி அளவுக்கு பெரிய விழாவாக புஷ்கரணி விழா நடத்தவேண்டும். இல்லாவிட்டால் இந்துக்களை புதுச்சேரி அரசு ஏமாற்றுவதாக அர்த்தம்.

போலி மருந்து தொழிற்சாலை நடத்தி கைது செய்யப்பட்டவர் புதுச்சேரியில் உடனடியாக விடுவிக்க படுகிறார்கள். கடந்த முறை சி.பி.சி.ஐ.டி. நன்றாக வேலை செய்த நிலையில் சி.பி.ஐயிடம் ஒப்படைத்தனர். சி.பி.ஐக்குக்கு லஞ்சம் நர முயன்றோர், உடன் சென்ற போலீஸ்காரர், பின்னால் இருக்கும் அரசியல்வாதி. எம்.எல்.ஏ. யார் என்பதை வெளியிடவேண்டும். புதுச்சேரி அரசு முழு ஆதரவுடன் போலி மருத்து உற்பத்தி, கடத்தல் நடக்கிறது. போலி மருந்து வெளி மாநிலங்கள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. 

இந்த விஷயத்தில் தமிழகத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதால் உரிய நடவடிக்கையை அந்த அரசு எடுக்கும். அடுத்த தேர்தல் தேவையில்லை. முதல் அமைச்சருக்கு மட்டும் தேர்தல் வைத்தால் போதும். அவரே அனைத்தும் வைத்து கொள்வார். அனைத்து அதிகாரங்களும் தனக்கு வேண்டும் என முதல்-அமைச்சர் நினைக்கிறார். புதுவையில் ரங்கசாமியின் காட்டு தர்பார்தான் நடக்கிறது. இதற்கு மக்கள்தான் முடிவு கட்ட வேண்டும்.

பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்கிறார்களே என கேட்டதற்கு, “அதை அவர்களிடம்தான் கேட்சு வேண்டும். முதலில் வெளியே வரட்டும் அதன்பிறகு தெரியும்- தி.மு.க. ஆதரவோடு புதுச்சேரியில் பா.ஜனதா ஆட்சி அமையுமா என்று கேள்வி கேளுங்கள்- நீங்கள் சொல்வதை பார்த்தால் புதுச்சேரியில்தான் முதலில் இதுபோல் அமையும் என்றார். 

புதுச்சேரியில் த.வெ.க.வுடன் கூட்டணி இருக்குமா என கேட்டதற்கு, நிலைப்பாடு பின்னர் தெரிவிக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரியும். நட்பு போட்டி நிச்சயம் இருக்காது என்றார். பேட்டியின்போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், அனந்தராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Source link