நள்ளிரவில் அம்மன் சிலையுடன் குளத்தில் குதித்த இளம்பெண்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தின் பீர்பெடிகுடா பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (25). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். பணிச்சுமையின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகினார்.   

இதையடுத்து, அவர் தனது தாயாருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று (17-07-26) அதிகாலை 2.30 மணி அளவில், அவர் தனது தாயாரை வீட்டில் வைத்துப் பூட்டி விட்டு அங்கிருந்து சென்றார். பின்னர்,  தனது ஆடைகளைக் களைந்துவிட்டு தெருக்களில் நிர்வாணமாகச் சுற்றித் திரிந்துள்ளார்.   

பின்பு, அங்கிருந்த ஒரு அம்மன் கோயிலுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துச் சென்றார். பின்னர், அங்கிருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமான காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  இதையடுத்து, மறுநாள் காலையில் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவரது தாயார் அலறினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். இதையடுத்து, தனது மகளைக் காணவில்லை என்று அவர் தேடினார்.   

பின்பு, அவரது மக்கள் குளத்தில் சடலமாகக் கிடப்பதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாக தேஜஸ்வினிக்கு கெட்ட கனவுகள் வந்ததாகவும், அதனால் அவர் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், அவர் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது தயார் தெரிவித்துள்ளார். இருப்பினும், கிடைத்துள்ள தடயவியல் முடிவுகளால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த மரணம் சந்தேக மரணமாகக் கருதப்படுகிறது.  இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் குளத்தில் இருக்கும் அம்மன் சிலையையும் தேடி வருகின்றனர்.  

Source link