வருகிறது கேரவன் சுற்றுலா திட்டம்; அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

சென்னை: புதிய சுற்றுலா திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி, தினமும் ஒவ்வொரு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக, தமிழகத்தில் முதல்முறையாக கேரவன் சுற்றுலாவை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா ஆகியவை உள்ளடக்கிய புதிய சுற்றுலா திட்டத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Source link