முதற்கட்ட தகவலின்படி, அவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆண்டு மே மாதம் முதல் அனுராக் தன்கர், அம்மாநில காவல்துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வரை சம்பவத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
