தனுஷ் கமெண்ட்: தனுஷ் ரசிகர் மன்ற கொடி அண்மையில் வைரலானது. அதை பார்த்தவர்களோ தனுஷ் அரசியலுக்கு வருகிறார், அதற்கு முன்னோட்டம் இது என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இந்த கொடியை தான் பல ஆண்டுகளாக ரசிகர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு தான் என இயக்குநர் சுப்ரமணியம் சிவா தெரிவித்தார்.
இந்நிலையில் தன்னுடைய கட்சியில் சேர வருமாறு தனுஷை அழைத்திருக்கிறார் முதல்வர் விஜய் என ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தேசிய விருது வென்ற கலைஞர்களை வாழ்த்தி முதல்வர் சார்பில் ட்வீட் வரவே அதை பார்த்த தனுஷ் நன்றி தெரிவித்து கமெண்ட் செய்தார்.
விஜய்ணா கட்சியில் சேரப் போகிறார் போன்று. அதனால் தான் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். ஆனால் அவர் முதல்வருக்கு மட்டும் அல்ல தேசிய விருது பெற்றிருப்பதற்காக தன்னை வாழ்த்தி ட்வீட் போட்ட அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
தளபதியன்ஸுக்கு ஓகே: தனுஷை உங்கள் அண்ணா அழைத்திருப்பதாக பேசப்படுகிறதே. அவர் தவெகவில் சேர்ந்தால் உங்களுக்கு ஓகேவா என்று விஜய் ரசிகர்கள் சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர்களோ, சம்மதம் தான். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மேலும் ஒரு போஸ்டர் பாய் கிடைத்துவிடுவார். தனுஷ் ரொம்ப பிரபலமானவர். நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர் தவெகவுக்கு வருவது விஜய்ணா கட்சிக்கு பெரிய பலம். இது நல்ல விஷயம் தானே என்கிறார்கள்.
இருப்பினும் தான் அரசியலுக்கு வருவதையும், தவெகவில் சேர்வதையும் தனுஷ் உறுதி செய்யாத வரை நம்ப முடியாது. இதற்கிடையே சிலரோ, தனுஷ் ஏன் விஜய் கட்சியில் சேர வேண்டும். அவரே தனியாக கட்சி துவங்கலாமே. ரசிகர் படை இருக்கும்போது தவெகவில் அதை சேர்ப்பது சரியா என்பதை அவர் யோசிக்க வேண்டும் என்கிறார்கள். விஜய்ணா கட்சியில் தனுஷ் சேர்வது உறுதியே இல்லை. அதற்குள் ஆளாளுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்திருப்பதுடன், கருத்தும் தெரிவிக்கிறார்கள்.
2 விருதுப்பு: தனுஷ் தற்போது கெரியர் தொடர்பாக சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல இயக்குநரும் கூட என சினிமா ரசிகர்களிடம் பெயர் எடுத்துவிட்டார். இந்த நேரத்தில் அவர் இயக்கி, நடித்த ராயனுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இயக்குநராக முதல் முறையாக தேசிய விருதை பெறப் போவதை மறக்கவே முடியாது. ஃபர்ஸ்ட் என்பது எப்பொழுதும் ஸ்பெஷல் என்கிறார் தனுஷ்.
72வது தேசிய விருது விழாவில் கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகராகவும், ராயனுக்காக இயக்குநராகவும் இரண்டு விருதுகளை பெறவிருக்கிறார். இந்நிலையில் ஓம் படப்பிடிப்பில் தனுஷ் மட்டும் அல்ல தேசிய விருது வென்ற மம்மூட்டி, ராஜ்குமார் பெரியசாமி, எடிட்டர் கலைவாணன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தனுஷ் நடித்து வரும் ஓம் படத்தின் இயக்குநர், எடிட்டர், சக நடிகர் மம்மூட்டி ஆகியோருக்கும் தேசிய விருது கிடைக்கவே அந்த படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இதற்கிடையே ராயனுக்கு தேசிய விருது ஏன் என்று ஜுரி மெம்பரான கலா மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.
Source link
