மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சினிமா வாழ்க்கையில் எப்போதும் தனது சுறுசுறுப்பையும் இளமையையும் தக்கவைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான். பல நேரங்களில் இவர் வயதை பின்னுக்குத் தள்ளுகிறார் என்று ரசிகர்கள் கூறுவதுண்டு.
இதனிடையே, மும்பையில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானின் சமீபத்திய வீடியோக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களுக்கும், ரசிகர்களின் கடுமையான கவலைகளுக்கும் காரணமாக மாறியுள்ளன. தற்போது 60 வயதில் கால் பதிக்கும் சல்மான் கான் இந்த வீடியோ பதிவில், திடீரென வயதானவர் போல் தோற்றமளிப்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
மும்பை குடிசை மாற்று வாரியத்தின் (Slum Rehabilitation Authority) புதிய ஐடி சர்வர் அறையின் திறப்பு விழாவில் பங்கேற்க சல்மான் கான் வந்திருந்தார். பயனாளிகளுக்கு சாவியை வழங்கும்போது அவர் புன்னகைத்த போதிலும், சல்மானின் சோர்வான தோற்றமும் அவரது ஆரோக்கிய நிலையும்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. சமீபத்திய பொது நிகழ்ச்சியில் அவரது தோற்றமும், மெலிந்த உடலமைப்பும் ரசிகர்களின் கவலைக்குக் காரணமாக இருந்ததைத் தொடர்ந்து, சல்மான் கான் நகைச்சுவையான ஒரு சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
தன்னுடைய சில புதிய புகைப்படங்களை சல்மான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் வதந்திகளைப் பற்றி சல்மான் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், தற்போது எழுந்துள்ள விவாதங்களுக்கு ஒரு லேசான பதிலடியாகவே இந்த பதிவை ரசிகர்கள் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளப் பதிவுகளின் மூலம் விஷயங்களைத் தெளிவுபடுத்துவதையே தான் விரும்புகிறேன் என்பதை சல்மான் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
‘வதந்திகளை நேரடியாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, சல்மான் அந்தப் பதிவிற்கு உங்களுடைய ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கிறது? என்று தலைப்பிட்டிருந்தார். தன்னைப்பற்றிக் கவலைப்படுபவர்களுக்கான நகைச்சுவையான பதிலாகவே பல ரசிகர்கள் இந்த வாக்கியத்தைக் கருதுகின்றனர். கேமராவிற்கு முன்னால் முற்றிலும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் அவர் போஸ் கொடுக்கும் புதிய புகைப்படங்கள் இதில் உள்ளன. அபூர்வா லக்கியா இயக்கத்தில் உருவாகும் ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ (Maatrubhumi: May War Rest in Peace) என்ற தனது அடுத்த படத்தின் வெளியீட்டிற்காக சல்மான் தற்போது தயாராகி வருகிறார்.
