பழநி முருகன் கோவில் ரோப் கார் சேவை 45 நாட்கள் ரத்து!

பழனி மலையின் சுவாரஸ்ய தல வரலாறு :

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த திருத்தலம், ஆன்மீக முக்கியத்துவமும் சுவாரஸ்யமான வரலாறும் கொண்டது.

ஞானப்பழம் தந்த கோபம்:

நாரதர் சிவபெருமானிடம் அளித்த ஞானப்பழத்தை முழுமையாக பெற, முருகனும் விநாயகரும் உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்றனர். விநாயகர் பெற்றோர் சிவ-பார்வதியை உலகம் எனச் சுற்றி வந்து பழத்தை பெற்றார். இதனால் கோபமுற்ற முருகன், தன் வாகனமான மயிலில் உலகை வலம் வந்து, இறுதியில் இந்த சிவகிரி மலையில் வந்து தங்கிவிட்டார்.

பின்னர், சிவபெருமானும் பார்வதியும் நேரில் வந்து, ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை “பழம் நீ” என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது.

காவடி வழிபாட்டின் தொடக்கம்:

அகஸ்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளைக் காவடி போல சுமந்து வந்த இடும்பன், ஓய்வெடுக்க மலையைக் கீழே வைத்தான். மலையில் முருகன் அமர்ந்திருந்ததால், அவனால் மீண்டும் மலையை தூக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட போரில் இடும்பன் மாண்டான். பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனை போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு.

Source link