மாவட்ட ஆட்சியரையே திடுக்கிட வைத்த 13 வயது சிறுவன்

உத்திர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர்ல்கேரியில் இன்று குறை தீர்வு கூட்டம் (சம்​பூர்ண சமா தான் திவஸ்) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமிதாப் குப்தா என்ற 13 வயது சிறுவனின் செயல் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.  

இன்று நடைபெற்ற கூட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் கலந்து கொண்டான். அப்போது, அவனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் அஞ்சனி குமார் சிங் திடுக்கிட்டார். பின்பு நீ தனியாகவா இங்கு வந்தாய்? எனக் கேட்டார். அதற்கு, ஆம்… எனப் பதிலளித்த சிறுவன், ”எனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர். எனது தாய் வீட்டு வேலை செய்கிறார். எனது உறவினர்கள் ( அத்தை மற்றும் மாமா) எங்களது பாரம்பரிய வீட்டின் ஒரு பகுதியைப்  பூட்டிவிட்டனர். இந்த இடத்தை வாடகைக்கு விட்டால் சிறிதளவு வருமானம் வரும். 

எனது தாய் விட்டு வேலைக்குச் சென்று மாதம் 3 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கிறார். அதனைக் கொண்டு எனக்கும் எனது சகோதரிக்கும் கல்விக்கான செலவைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இந்த பகுதியை வாடகைக்கு விட்டால், அதில் வரும் வருமானம் எங்களது படிப்பிற்கு உதவும். அதனால், நான் மற்றும் எனது சகோதரியால் பள்ளிக்குக் கூட செல்ல முடியவில்லை. 

இது குறித்துப் பல முறை உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தோம். இருப்பினும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறினான். இதையடுத்து, இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அருகில் இருந்த காவல் ஆய்வாளர் உறுதியளித்தார். இதனைக் கேட்டு விரக்தியடைந்த சிறுவன், ” செய்து தருவதாகச் சொல்லாதீர்கள். செய்து காட்டுங்கள்” என்று கூறினான்.   இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  

அதிகாரிகள் முன்னிலையில், இவ்வாறு பேசக்கூடாது என சிறுவனைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இதையடுத்து, இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.  மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார் மனு அந்த சிறுவன், தான் கைப்பட எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link