கிளாசிக் ஸ்னுாக்கர்: அத்வானி அசத்தல்

மும்பை: கிளாசிக் ஸ்னுாக்கர் முதல் சுற்றில் பங்கஜ் அத்வானி, சவுரவ் கோத்தாரி வெற்றி பெற்றனர்.

மும்பையில், சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ புனேயின் பங்கஜ் அத்வானி, ரயில்வே அணியின் ரோவின் டி’சவுசா மோதினர். அபாரமாக ஆடிய அத்வானி 4-0 (58-55, 73-7, 92-33, 64-52) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் கொல்கட்டாவின் சவுரவ் கோத்தாரி, புனேயின் சூரஜ் ரதி மோதினர். இதில் அசத்திய கோத்தாரி 4-0 (93-28, 70-0, 123-7, 72-37) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மும்பையின் ஹசன் பதாமி 4-0 (92-13, 72-21, 79-70, 59-31) என, ரயில்வேயின் சித்தார்த் பாரிக்கை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆதித்யா மேத்தா, உ.பி.,யின் கார்த்திக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Source link