அரசுடன் கரப்பான் பூச்சி கட்சியினர் பேச்சு வார்த்தை; முன் வைக்கப்பட்ட 3 நிபந்தனைகள்

கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கல்வியாளர் சோனம் வாங்சுக், ஜூன் 28 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும்,  ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் காவல்துறையினரால் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்டக்களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்று (20-07-26) காலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருந்த நிலையில் அவர்கள் பேரணி செல்ல முயன்றனர். 

இந்நிலையில், ஏராளமான காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தாதவாறு தடுக்கப்பட்டது. இதனால், இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டம் தீவிரமானது. 

போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து,  ஒன்றிய அரசு போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ள கரப்பான் பூச்சி கட்சியினரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இதையடுத்து, கரப்பான் பூச்சி கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அமைச்சர் நட்டவுடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சோனம் வாங்கி சுக்கை விடுவிப்பது, தர்மேந்திர பிரதான் ராஜினாமா மற்றும் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்குத் தல ரூ.1 கோடி இழப்பீடு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டன.  

பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் இது சம்பந்தமாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.  இதனிடையே, இளைஞர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டுமென நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து விலகுவது அல்லது வேறு துறைக்கு மாற்றப்படுவது குறித்துப் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, பலரும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வாய்ப்பிருப்பதாக கூறிவருகின்றனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link