ஈரான் உச்ச தலைவரை சந்தித்ததில்லை: வெளியுறவு அமைச்சர் பேச்சால் சர்ச்சை

டெஹ்ரான் : ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனியை இதுவரை நேரில் சந்திக்கவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு விமானத் தாக்குதலில் மேற்காசிய நாடான ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார்.

ஆனால் அவரும் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பேட்டி ஒன்றில், புதிய உச்ச தலைவர் மொஜ்தபாவை நான் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அவரைச் சந்தித்துள்ளனர், என, குறிப்பிட்டுள்ளார்.

அராக்சி முன்பு, மொஜ்தபா முழு அதிகாரத்துடன் நாட்டை நடத்துகிறார். பாதுகாப்பு காரணங்களால் அவர் வெளியே வரவில்லை என கூறியிருந்தார். ஆனால், இப்போது தானே அவரைச் சந்திக்கவில்லை என கூறியிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Source link