சிக்கிமில் நிலச்சரிவு: 27 பேர் சிக்கிக் கொண்டதால் பீதி

காங்டாக்: சிக்கிமில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட 27 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிமின் நம்சி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுழைவு வாயில் முற்றிலும் மூடியது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் அந்த சுரங்கத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மீட்புப்படையினர், பாதிக்கப்பட்டவர்களை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உறவினர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Source link