வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிட்டது பா.ம.க.,

சென்னை: பா.ம.க., சார்பில் வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

பா.ம.க., சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வேளாண் நிழல் பட்ஜெட், தமிழக நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கட்சியின், 19வது வேளாண் நிழல் பட்ஜெட்டை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி, சென்னையில் நேற்று வெளியிட்டார்.

மொத்தம் 93,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள இப்பட்ஜெட்டில், 68,000 கோடி ரூபாய் வேளாண் துறை வழியாக செலவிடப்படும் என்றும், பாசன திட்டங்களுக்காக நீர்வளத்துறை வழியாக 25,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாசன கூடுதல் செலவுக்காக, ஏக்கருக்கு 5,000 ரூபாய் சிறப்பு மானியம், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி, வேளாண் துறையில் புதிதாக 50 லட்சம் வேலை வாய்ப்புகள் என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,’பா.ம.க., பொதுக்குழு கூட்டம், வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு, மாமல்லபுரத்தில் உள்ள ‘கான்ப்ளுயன்ஸ்’ அரங்கில் நடக்கும்.

இதில், பா.ம.க., பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும், தவறாமல் பங்கேற்க வேண்டும்’ என, கூறி உள்ளார்.

Source link