பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வரை மிரட்டும் வகையில் பேச்சு – தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்ற காவல்
முதல்வர் விஜயை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய்யின் முதுகெலும்பை உடைப்போம் எனக் கூறிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ள நிலையில் நிலையில், தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் அவரிடம் போலீசார் 11 மணி நேர விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனை முடிந்து மார்க்கண்டேயனை, தூத்துக்குடி மாவட்ட ஜே.எம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பு போலீசார் ஆஜர்ப்படுத்த்தினர்.
29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக்கூட்டம் வரும் 29.07.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 21, 2026 07:28 IST
12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் – ஜூலை 30-ந் தேதி வழங்கப்படும் என அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
