எழுதியவர்:அசாத் ரஹ்மான்
டெல்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி (சி.ஜே.பி) போராட்டத்தின் எதிரொலி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் வினாத்தாள் கசிவு, கல்வித்துறை சீர்திருத்தம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் மொபைல் நெட்வொர்க் ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டதாக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய் தனது கருத்துகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையுடன் பகிர்ந்துள்ளார்.
நேற்று (ஜூலை 20) நடந்த சம்பவங்களுக்குப் பிறகு, உங்கள் கட்சி தற்போது சி.ஜே.பி-யை எவ்வாறு பார்க்கிறது?
சி.ஜே.பி போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார், குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதையும், இந்திய கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெல்லி தெருக்களில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பத்திலேயே தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது
நேற்று (ஜூலை20) நடந்ததைப் போன்ற அணிதிரட்டல், காங்கிரஸ் அல்லது இந்தியா கூட்டணி கட்சிகள் போன்ற எந்தவொரு அரசியல் கட்சிகள் மூலமாகவும் ஏன் நடைபெறவில்லை?.
இளைஞர்களின் போராட்டம் அரசியல் கட்சிகளைத் தாண்டியது. இந்த போராட்டம் ஏன் காங்கிரஸ் அல்லது இந்தியா கூட்டணியின் நேரடி தலைமையில் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த கோகோய், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று வருவதாக கூறினார். காங்கிரஸ் நடத்திய ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ (Chhatron Ki Goonj) நிகழ்ச்சிக்கும், இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேசமயம், எந்த அரசியல் கட்சியுடனும் நேரடி தொடர்பு இல்லாத தளங்களில் இளைஞர்கள் அதிக அளவில் ஒன்றுகூடும் போக்கு தற்போது வருகிறது.
கல்வி சீர்திருத்தம் என்ற முக்கிய பிரச்சினையில் மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒரே கருத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மையான உணர்வில்லாமல் செயல்படுவது பா.ஜ.க அரசு தான்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அலைபேசி இணையதளம் முடக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர். என்ன நடந்தது?
நாடாளுமன்ற வளாகத்தில் மொபைல் நெட்வொர்க் சேவை முடக்கப்பட்டதாக எம்.பி.க்கள் குற்றம்சாட்டிய நிலையில், அதுகுறித்தும் கௌரவ் கோகோய் விளக்கம் அளித்தார். அதில் மொபைல் நெட்வொர்க் ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி எம்.பி.க்களுக்கு எந்த முன் தகவலும் வழங்கப்படவில்லை. சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளை பார்க்க மற்றும் பதிவிட முடியாத நிலை ஏற்பட்டபோதும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
பின்னர், நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுத்தது குறித்து மற்ற எம்.பி.க்கள் மூலம் தான் தகவல் கிடைத்தது. அதன்பிறகே பாதுகாப்பு அதிகாரிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பாக இயங்குவதை கவனித்தோம். மேலும், திடீரென்று பாதுகாப்புப் படையினர் நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஓடுவதை நாங்கள் கண்டோம். என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்குச் சிறிதும் விளக்கப்படவில்லை.
ஆனாலும், நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் சென்று இந்த விஷயம் குறித்து விவாதிக்கக் கோரியபோது, அரசாங்கத்தின் பதில் மிகவும் அலட்சியமாக இருந்தது. அது சற்றும் அக்கறையற்றதாக இருந்தது. மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் புன்னகைத்துச் சிரிப்பது போல் தோன்றியது.
மல்லிகார்ஜுன் கார்கேவின் அறையில் கூட்டத்திற்காக கூடியிருந்த எதிர்க்கட்சிகளிடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தனவா?
காலை நடைபெற்ற கூட்டத்தில் நாம் விவாதித்தது, கடந்த சில நாட்களாக அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் நடந்த நிகழ்வுகளைப் பற்றியே ஆலோசனை செய்தோம். முக்கிய அரசியல் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருந்தோம். இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே இளைஞர்கள் கூடிவருவதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம்… மாணவர்களின் பிரச்சினையை வலியுறுத்துவதோடு, மற்றொரு முக்கியப் பிரச்சினையான ராமர் கோவில் (நன்கொடை சர்ச்சை) பிரச்சினையும் எழுப்பப்படுவதை உறுதிசெய்யவும் நாங்கள் விரும்பினோம்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியபோது, மத்திய அரசின் பதில் மிகவும் அலட்சியமாக இருந்தது. மோடி அரசின் அமைச்சர்கள் இந்த விவகாரத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டதோடு, சிரித்தும் பேசிக் கொண்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கோகோய் தெரிவித்தார்.
நாம் பார்த்தவற்றிற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை முதல் நாடாளுமன்றத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த கௌரவ் கோகோய், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறினார். மேலும், பல மாநிலங்களில் தேர்தலுக்கு முன் முதல்வர்களையே மாற்றும் பா.ஜ.க, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது மட்டும் பிரதமர் மோடி ஏன் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை. அரசு தொடர்ந்து அலட்சியமும் அகங்காரமும் காட்டினால், அதன் அரசியல் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கௌரவ் கோகோய் எச்சரித்தார்.
