சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் இன்று (ஜூலை 21) காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற ஆர்டிஓ வீட்டிலும், திருவொற்றியூரில் தொழிலதிபர் முருகேசன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக் குவிப்புப் புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Source link