டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: தலைநகரை முற்றுகையிட ஆயத்தம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட உள்ளா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜூலை 21 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மகாபஞ்சாயத்தில் பங்கேற்பதற்காகப் பஞ்சாபிலிருந்து திரளான விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை டெல்லி நோக்கிக் புறப்பட்டனர். டெல்லியின் ‘கிசான் காட்’  பகுதியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ‘தேஷ் பச்சாவ் மோர்ச்சா’ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 550 விவசாயிகள் சங்கங்களும் சமூக அமைப்புகளும் இதில் பங்கேற்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி அதிகாரி கொடுத்த பாலியல் புகார்: பெண் ஐ.பி.எஸ் தற்கொலை முயற்சி; சந்திரபாபு நாயுடு பாராட்டிய அதிகாரிக்கு நேர்ந்த கதி

அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கா இந்த ஒப்பந்தம்?

டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் வியாஸ் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர் ஜெர்மன்ஜித் சிங் பண்டாலா, இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய மக்களைப் கடுமையாகப் பாதிக்கும் என்று குற்றம் சாட்டினார். இந்தியாவின் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விவசாயிகள் சந்திக்கும் அசுர ஆபத்து

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட பண்ணைகளில் அசுர அரசாங்க மானியங்களின் ஆதரவோடு விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான இந்திய விவசாயிகளிடம் வெறும் இரண்டு முதல் இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது; அவர்களுக்குக் கிடைக்கும் நிதி ஆதரவும் மிகக் குறைவு.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து மலிவான விவசாயப் பொருட்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்தால், இந்தியச் சிறு விவசாயிகளால் அவற்றுடன் போட்டியிட முடியாது என்றும், இது அவர்களின் விவசாய வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் பண்டாலா எச்சரித்தார்.

இது ஆரம்பம் தான் – அரசுக்கு எச்சரிக்கை

முந்தைய அரசாங்கங்கள் விவசாயத் துறையை வெளிநாட்டுச் செல்வாக்கிலிருந்து பாதுகாத்ததாகவும், ஆனால் தற்போதைய மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை முன்னோக்கி நகர்த்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதன் தாக்கம் விவசாயத்தைத் தாண்டி, சிறு வணிகங்கள் மற்றும் பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும் என்றார்.

பஞ்சாப் தவிரப் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த ஜூலை 21 மகாபஞ்சாயத்தில் கலந்துகொள்வார்கள் என்று கூறிய பண்டாலா, போராட்டக்காரர்களை டெல்லிக்குச் செல்ல விடாமல் தடுத்தால், தடுத்து நிறுத்தப்படும் இடத்திலேயே அமைதியான முறையில் கூடி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றார். மத்திய அரசு இந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கைவிட்டு, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை இயக்கம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

Source link