2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,135 ரூபாய்க்கும், சவரன், 1,05,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை; அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று (ஜூலை 20) தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 13,150 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 1,05,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

சிறப்பு வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

Source link