சென்னை: சென்னையில் இன்று (மார்ச்19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வருகிறது. கடந்த மார்ச் 16ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,17,680 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்து, 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் (மார்ச் 17) ஆபரண தங்கம் கிராம், 14,650 ரூபாய்க்கும், சவரன், 1,17,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 18), தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் குறைந்து, 14,570 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவ டைந்து, 1,16,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 275 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச்19) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
