தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இளம் நடிகர் கவின் இணைந்து நடித்துள்ள படம் ’ஹாய்’. இப்படத்தினை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். ’7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்று வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்துப் படக்குழுவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், ” உங்கள் மனதைக் கொள்ளைகொள்ளும் ஒரு கதைக்கான வெளியீட்டுத் தேதி உறுதியாகிவிட்டது. யு/ஏ சான்றிதழ் பெற்று திரையரங்குகளுக்கு வரவிருக்கும் இப்படம், 2026 ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விஷ்ணு எடவன் வரிகளில் இப்படத்தின் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடையே, டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
