டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி!

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையொட்டி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று (21.07.2026) போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். 

அதே சமயம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க, பஞ்சாப் – ஹரியானா மாநில எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் டெல்லியை நோக்கித் திட்டமிடப்பட்டுள்ள தங்களின் பேரணிக்கு முன்னதாக, பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு எல்லையை வந்தடைந்துள்ளனர். டெல்லியில் ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

Source link