விலங்கு கழிவுல காஃபியா? விலைய கேட்டா கிறுகிறுனு ஆய்ருவீங்க; இந்தியாலயும் கிடைக்குதாம்

பொதுவாக நாம் குடிக்கும் காபி தூள் மரங்களில் இருந்து பறிக்கப்படும் காபி கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், உலகின் மிக விலையுயர்ந்த காபி ஒரு விலங்கின் கழிவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது கேட்க விசித்திரமாக இருந்தாலும் 100% உண்மை. அந்தக் காபியின் பெயர் ‘கோபி லுவாக்’ (Kopi Luwak) அல்லது புனுகுப்பூனைக் காபி. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த காபி ஒரு கப் சுமார் 100 டாலருக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,000 விற்கப்படுகிறது.

75,000 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு எஃபெக்ட்… மொத்த இனமும் காத்தோட கலந்திருச்சு; ஒரு டீம் மட்டும் தான் தப்பிச்சிருக்காங்க

காபி தயாரிப்பில் புனுகுப்பூனையின் விசித்திரப் பங்கு

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை செய்தியின்படி, ‘ஆசியப் பனைப் புனுகுப்பூனை’ (Asian Palm Civet) என்ற பூனை போன்ற ஒரு விலங்குதான் இந்த விலை உயர்ந்த காபியின் பின்னணியில் இருக்கிறது. இந்தோனேசியாவின் பாலி மற்றும் சுமாத்ரா காடுகளில் வாழும் இந்த விலங்குகளின் முக்கிய உணவு காஃபி பழங்கள் ஆகும். இவை காஃபித் தோட்டங்களில் சுற்றித் திரிந்து, மிக உயர்ந்த தரம் வாய்ந்த, நன்கு பழுத்த சிவப்பான காஃபிப் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணுகின்றன.

வயிற்றுக்குள் நடக்கும் மேஜிக்

புனுகுப்பூனையின் வயிற்றுக்குள் செல்லும் காபிப் பழத்தின் சதைப்பகுதி மட்டுமே செரிக்கப்படுகிறது. ஆனால், அவற்றுக்குள் இருக்கும் காஃபி கொட்டைகள் அப்படியே சிதையாமல் மலத்துடன் வெளியேறுகின்றன. பூனையின் வயிற்றில் உள்ள நொதிகளும் அமிலங்களும் அந்தக் கொட்டைகளின் கசப்புத் தன்மையைக் குறைத்து, அவற்றுக்கு ஒரு விசித்திரமான, அற்புதமான சுவையைக் கொடுக்கின்றன.

மலத்திலிருந்து காபி தூள் வரை- பதப்படுத்தும் முறை

இந்த விலங்கின் மலத்தின் வழியாக வெளியே வரும் கொட்டைகளை விவசாயிகள் காடுகளிலிருந்து கவனமாகச் சேகரிக்கின்றனர். இதைத் தயார் செய்வது அதிக நேரம் எடுக்கும் ஒரு நுணுக்கமான பணியாகும். சேகரிக்கப்பட்ட மலத்தில் உள்ள காபி கொட்டைகள் முதலில் பலமுறை சுத்தமாகக் கழுவப்படுகின்றன. பின்னர் அவை நிழலில் உலர்த்தப்பட்டு, அதிக வெப்பநிலையில் வறுக்கப்படுகின்றன. இந்த அதிகப்படியான வெப்பம் கொட்டைகளில் உள்ள பாக்டீரியாக்களை முற்றிலுமாக அழித்து, அதை அருந்துவதற்குப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

சுவை எப்படி இருக்கும்?

இந்தக் காபி மிகவும் மென்மையாகவும் (Smooth), லேசான சாக்லேட் சுவையுடனும், அற்புதமான நறுமணத்துடனும் இருக்கும். அதனால்தான் உலகப் பணக்காரர்கள் இதன்பால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த காஃபி இந்தோனேசியாவில் மட்டுமல்ல, நமது நாடான இந்தியாவிலும் இந்த உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டின் கர்நாடக மாநிலத்தின் கூர்க் (Coorg) பகுதியில், காடுகளில் வாழும் காட்டுப் பூனைகள் உதிர்க்கும் கழிவு விதைகளிலிருந்து இந்தக் காபி மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

Source link