தனுஷ் விருதுகள்: 72வது தேசிய விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதில் இருந்து அது குறித்து தான் பலரும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய விருது ஜுரி சரியில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். தனுஷுக்கு கேப்டன் மில்லருக்காக நடிப்புக்கான தேசிய விருதும், அவர் இயக்கிய ராயனுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது.
ராயன் படத்தில் என்ன இருக்கிறது என்று தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள். இதற்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பது போன்று உள்ளது. தனுஷை குறி வைத்து பெரிய பிளான் போட்டு தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள். இது குறித்து தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, என் மகனுக்கு விருது கிடைத்திருப்பதற்கு அரசியல் நிலைப்பாடு காரணம் இல்லை. ஜுரி ஆட்கள் தான் விருது பெறும் ஆட்களை முடிவு செய்வார்கள். அதன்படியே தனுஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கஸ்தூரி ராஜா பெருமை: என் மகனுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் தனுஷை விட பெரிய நடிகர்கள் யாரும் இல்லையா என்ன?. அவர்கள் ஏன் ஜுரியை அணுகி விருது பெறவில்லை?. இது அரசு மற்றும் ஜுரியின் முடிவு என்றே நான் நினைக்கிறேன். நாலு பேரை பார்த்து ஐயா எனக்கு விருது கொடுங்கள் என கேட்கும் அளவுக்கு என் மகனுக்கு புத்திசாலித்தனம் கிடையாது.
இதற்கு முன்பு ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார் தனுஷ். விருதுகளுக்காக என் மகன் ஏங்க மாட்டார். தனுஷ் கூப்பிட்டால் நான் அவர் படத்தில் நடிப்பேன். ஆனால் செல்வராகவன் அழைத்தால் நடிக்க போக மாட்டேன். செல்வராகவனுடன் நடிப்பது ரொம்பவே கஷ்டம். தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும், இல்லை என்றாலும் சரி. அது குறித்து நாங்கள் அவரிடம் எதுவும் கேட்க மாட்டோம் என்றார்.
தனுஷ் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப் போகிறார் என்று அண்மையில் பேச்சு கிளம்பியது. தனுஷ் ரசிகர் மன்ற கொடியை பார்த்ததும் இது அரசியலுக்கான முன்னோட்டமே என பேசினார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது, ஏற்கனவே இருந்த கொடியில் சில மாற்றம் செய்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா.
விஜய் அழைப்பு: இந்நிலையில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வருமாறு தனுஷிடம் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய் என்று வேறு பேச்சு கிளம்பியிருக்கிறது. விஜய்ணா அழைத்தாலும் தனுஷ் அந்த கட்சிக்கு போக வாய்ப்பே இல்லை. தனியாக கட்சி துவங்கி முதல்வராகும் திறமை எங்கள் அண்ணனுக்கு இருக்கிறது என்கிறார்கள் நடிப்பு ராட்சசனின் ரசிகர்கள்.
இதற்கிடையே விஜய் ரசிகர்கள் வேறு மாதிரி பேசுகிறார்கள். அதாவது, விஜய்ணா தான் அடுத்த பிரதமர். அவர் டெல்லிக்கு சென்றுவிட்டால் தமிழகத்தை ஆட்சி செய்ய ஒரு முதல்வர் வேண்டும். அதற்காக தன் இடத்தில் தனுஷை வைக்க நினைக்கிறார் போன்று. இது விஜய்ணாவின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தேசிய விருதுகள் பட்டியலில் விக்ரம் பெயர் ஏன் இல்லை என கேட்கிறார்கள் சீயான் ரசிகர்கள். மகாராஜா விஜய் சேதுபதிக்கும், அமரன் சிவகார்த்திகேயனுக்கும் ஏன் விருது வழங்கவில்லை என்றும் அவர்களின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் விருது வென்றவர்களை தேர்வு செய்தது எப்படி என விளக்கியிருக்கிறார் ஜுரியில் இருந்த கலா மாஸ்டர்.
Source link
