சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிரேடிங் குறித்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. ஹர்திக் பாண்டியாவை வாங்க பேச்சு வார்த்தையை நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் பந்துவீச்சு படையை பலப்படுத்தவும், சிஎஸ்கே முடிவு செய்து, டிரேடிங் பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக, ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக, தரமான இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், குஜராத் டைடன்ஸ் அணியுடன் சாய் கிஷோருக்காக பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது, சாய் கிஷோருக்கு மாற்றாக, சர்பரஸ் கானை விடுவிக்க தயார் என சிஎஸ்கே தெரிவித்தது.
குஜராத் டைடன்ஸுக்கு, மிடில் வரிசையில், நிலையாக ஆடும் ஒரு பேட்டர் தேவை என்பதால்தான், சிஎஸ்கே நிர்வாகம், சர்பரஸ் கானை விடுவிக்க முடிவு செய்தது. இந்நிலையில், எங்களுக்கு சர்பரஸ் கான் வேண்டாம், உர்வில் படேல்தான் வேண்டும் என குஜராத் டைடன்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், உர்வில் படேலை கொடுத்தால், சாய் கிஷோரை கொடுத்து, மேலும் வாஷிங்டன் சுந்தரையும், பணத்திற்கு மாற்றாக தர சம்மதம் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் குஜராத் டைடன்ஸ் நிர்வாகம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
உர்வில் படேலுக்கு மாற்று: இந்நிலையில், உர்வில் படேலை, குஜராத் டைடன்ஸுக்கு கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். மேலும், உர்வில் படேலுக்கு மாற்றாக, டெல்லி கேபிடல்ஸிடம் இருந்து அசுதோஷ் சர்மாவை பெற சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டெல்லி அணிக்கு, ஒரு தரமான ஸ்பின்னர் தேவைப்படுகிறார். அந்த குறையை போக்க, நூர் அகமதுவை டெல்லிக்கு கொடுத்துவிட்டு, அசுதோஷ் சர்மாவை பெற சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டிரேடிங் டீல்கள் ஓகே ஆகிவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், சுழற்பந்து வீச்சு படை பலம் பெறும். மேலும், இனி ஸ்பின்னர் இடத்தில், ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்பட மாட்டார். மேலும், தோனிக்கு அடுத்து ஒரு தரமான பினிஷர் சிஎஸ்கேவுக்கு கிடைப்பார். அசுதோஷ் சர்மாவால், கடைசி 4 ஓவர்களில் தொடர்ச்சியாக காட்டடி அடிக்க முடியும். இதனால்தான், அசுதோஷ் சர்மாவை வாங்க சிஎஸ்கே தீவிரமாக முயற்சித்து வருகிறது.
சிஎஸ்கே திட்டம் என்ன? ஐபிஎல் தொடரில், கடந்த மூன்று சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், அடுத்த 5-10 வருடங்களுக்கான அணியை கட்டமைக்கும் வேலையை, சிஎஸ்கே தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே, தற்போது சிஎஸ்கேவின் திட்டமாக இருக்கிறது.
இதனால், இளம் வீரர்களை டார்கெட் செய்து தேர்வு செய்யாமல், திறமை இருக்கும் சீனியர் வீரர்களையும் ஏலத்தில், டிரேடிங்கில் வாங்கி, ஐபிஎல் 2027 சீசனில் கம்பேக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, முகமது ஷமியையும் லக்னோ அணியிடம் இருந்து வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாம்.
கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாத காரணத்தினால், சிஎஸ்கேவின் மதிப்பு பெரிய அளவில் குறைய ஆரம்பித்துள்ளது. இதனை தடுக்க, அடுத்த சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
