மழை பெய்தா டூர் கேன்சல் பண்ற காலம் போச்சு பாஸ்; மன்சூன் கிங்: புக்கிங்கில் மிரட்டும் கடவுளின் தேசம்

முன்பெல்லாம் மழைக்காலம் என்றாலே திட்டமிட்ட சுற்றுலாக்களை ரத்து செய்வதுதான் வழக்கம். ஆனால், இப்போது இந்தியப் பயணிகளின் ட்ரெண்ட் அடியோடு மாறிவிட்டது. மழையைக் கண்டு பயப்படாமல், மழைக்காகவே சுற்றுலா செல்லும் புதிய கலாச்சாரம் இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ‘கிளியர்ட்ரிப்’ (Cleartrip) நிறுவனம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அறிக்கையின்படி, இந்தியாவில் ஹோட்டல் புக்கிங் 54% அதிகமாகியுள்ளது; பஸ் புக்கிங் 140% வரை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

காதல் இருப்பது ஓகே தான்… ஓவரா அன்ப பொழிந்தால் ஜெயில்ல தான் இருக்கணும்; விசித்திர சட்டம் உள்ள நாடுகள்

அசுர வளர்ச்சியில் வயநாடு முதலிடம்

இந்தியாவின் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பின்னுக்குத் தள்ளி, கேரளாவின் வயநாடு இந்த ஆண்டின் ‘மன்சூன் டிராவல்’ ராஜாவாக உருவெடுத்துள்ளது. ஹோட்டல் புக்கிங்கில் 160% அசுர வளர்ச்சி கண்டு முதலிடம் பிடித்துள்ளது. அலெப்பி  145% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மலைப்பிரதேசங்களான கொடைக்கானல், ஊட்டி ஹோட்டல் புக்கிங் 70% வரை அதிகரித்துள்ளது.

மலைகள் மட்டுமில்லை கடற்கரைகளிலும் மழை வேட்டை

கோவா : 110% ஹோட்டல் புக்கிங் அதிகரிப்பு

பாண்டிச்சேரி : 104% வளர்ச்சி!

விசாகப்பட்டினம் 85% மற்றும் உதைப்பூர்  50% வளர்ச்சி கண்டுள்ளன.

ஏன் அனைவரும் வயநாட்டை நோக்கிப் படையெடுக்கிறார்கள்?

அதிக வணிகமயமாக்கப்பட்ட பிற மலைவாழிடங்களை விட வயநாடு அமைதியான, பசுமையான சூழலைத் தருகிறது. அடர்ந்த காடுகள், ஏலக்காய், மிளகு போன்ற நறுமணத் தோட்டப் பகுதிகள் மற்றும் தேயிலை எஸ்டேட்கள் மழைக்காலத்தில் புதுப் பொலிவு பெறுகின்றன.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் சூச்சிப்பாறை (Soochipara), மீன்முட்டி (Meenmutty), காந்தன்பாறை (Kanthanpara) அருவிகள் சீறிப் பாய்கின்றன. செம்பரா சிகரம் (Chembra Peak), எடக்கல் குகைகள் (Edakkal Caves), வைத்திாி மற்றும் கல்பற்றா பகுதிகள் மேகக் கூட்டங்களால் சூழப்பட்டு, புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கபுரியாக மாறுகின்றன. மேலும், 15 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலான குளுமையான வானிலை, வயநாடு வனவிலங்கு சரணாலயத்தின் அசுர பசுமை மற்றும் ஈரமான மண்ணின் நறுமணம் ஆகியவை பயணிகளைச் சுண்டி இழுக்கின்றன.

வடகிழக்கு இந்தியாவிலும் வெடிக்கும் மன்சூன் ட்ரெண்ட்

கேரளா மட்டுமல்லாது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் மழைக்கால சுற்றுலா அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு விமான புக்கிங் 62%, ஹோட்டல் புக்கிங் 90%-க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது. ஷில்லாங், கவுகாத்தி, இட்டாநகர், ஜோர்ஹாட் மற்றும் இம்பால் போன்ற நகரங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி வருகின்றன.

Source link