இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகர்ஜுன கார்கேவிற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (21-07-26) பிறந்த நாள் கொண்டாடுகிறார். 84 வயதைப் பூர்த்தி செய்துள்ள அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ” மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் திகழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
