'இன்னும் 10 நாள்களே' – ITR Filing-ஐ நீங்களே செய்யலாம்? உங்களுக்கான Step by Step Photo Guide

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்னும் கிட்டத்தட்ட 10 நாள்களே பாக்கி உள்ளன.

ஏகப்பட்ட வருமானம், முதலீடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டித் தரும் சொத்துகள் இருப்பவர்கள்… வரிக் கட்ட வேண்டியவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, ஆடிட்டரின் உதவியை நாடுவதுதான் சிறந்தது.

எனக்கு வரி எல்லாம் கட்ட ஒன்றும் இல்லை… குறைந்த வருமானமே உள்ளது என்பவர்கள் இந்த வழிகாட்டுதல் படி, நீங்களே உங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். அதன் ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டுதல் இதோ!

eportal.incometax.gov.in – இந்த இணையதளத்திற்குள் செல்லவும். இது Login ID ஆக, உங்கள் பான் எண்ணை உள்ளிட்டு கொள்ளவும். அடுத்து Continue கொடுக்கவும்.

ஒருவேளை புதிதாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கிறீர்கள் என்றால், கீழே உள்ள புகைப்படத்தில் காட்டி மஞ்சள் நிற சதுரமாகக் காட்டியிருக்கும் இடத்தில் உள்ள ‘Register‘-ஐ கிளிக் செய்து, உங்கள் தகவல்களை உள்ளிட்டு கொள்ளுங்கள்.

ITR Filing – வழிகாட்டி

அடுத்து ஓபனாகும் பக்கத்தில், ‘Please…’ என்று தொடங்கும் செக் பாக்ஸை டிக் செய்தபின், பாஸ்வேர்டைப் பதிவிட்டு, ‘Continue’ கொடுக்கவும்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

இந்தப் பக்கத்தில், ‘2026-27 (Current A.Y.)‘-ஐ கிளிக் செய்துவிட்டு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய Online Mode-ஐ செலெக்ட் செய்துவிடுங்கள்.

இங்கே AY என்பது Assessment Year-ஐ குறிக்கிறது. அதாவது, 2025-26-ம் ஆண்டு நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கலை 2026-27 அசஸ்மென்ட் ஆண்டில் தாக்கல் செய்கிறீர்கள்.

முந்தைய வருமான வரிச் சட்டத்தின் கீழ், Previous Year, Assesment Year என்கிற இரண்டு பிரிவுகள் உள்ளன. இங்கே Previous Year என்றால், வருமானம் ஈட்டிய ஆண்டு. Assessment Year என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த ஆண்டு.

அடுத்த ஆண்டில் இருந்து Previous Year, Assesment Year என்கிற குழப்பம் இருக்காது. காரணம், இனி ‘Tax Year’ என்பது மட்டும்தான்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

தற்போது ‘Start New Filing‘-ஐ கிளிக் செய்யவும். ஒருவேளை, 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கலை முன்பு செய்திருந்தீர்கள் என்றால், இதற்கு மேலே காட்டும்.

நீங்கள் எந்த இடத்தில் விட்டீர்களோ, அந்த இடத்தில் இருந்தே வருமான வரிக் கணக்கு தாக்கலைத் தொடங்கலாம்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

ITR Filing – வழிகாட்டிஇங்கே ‘Individual’-ஐ கிளிக் செய்யவும்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

இப்போது உங்களுக்கு எந்த ITR Form வகை வருகிறதோ, அதை கிளிக் செய்துகொள்ளவும்.

யாருக்கு எந்த ஃபார்ம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளவும்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

Lets Get Started > Others கொடுக்கவும்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுகளில் இருக்கும் தகவல்களையும் உங்களுக்கு நிறுவனம் அனுப்பிய ஃபார்ம் 16 உடன் சரிபார்த்துகொள்ளவும்.

அனைத்தும் சரியாக இருந்தாலும் Proceed to Verification கொடுக்கவும். ஒருவேளை, மாற்றம் இருந்தாலும் Edit என்கிற ஆப்ஷனைப் பயன்படுத்தி மாற்றம் செய்துகொள்ளவும்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

இப்போது உங்களுக்கு ஓபனாகும் பக்கத்தில் ‘Preview and Submit Your Return’ காட்டும். அதை கிளிக் செய்துகொள்ளவும்.

அடுத்து ‘Proceed to Verification’ கொடுத்தால், ஒரு விண்ணப்பம் ஓபனாகும். அதில் கொடுத்துள்ள தகவல்களைச் சரிபார்த்த பின், அடுத்தடுத்து வரும் புகைப்படங்களில் உள்ள ஸ்டெப்களை ஃபாலோ செய்யவும்.

ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி
ITR Filing - வழிகாட்டி
ITR Filing – வழிகாட்டி

இறுதியாக, Download Receipt கொடுத்து, உங்களது ரெசிப்டை டவுன்லோடு செய்துவிட்டால், உங்களுடைய வருமான வரிக் கணக்கு தாக்கல் சக்சஸ்.

இடையில் ஏதேனும் தவறுகளை நீங்கள் செய்திருந்தால், அது எங்கே என்று சொல்லப்படும். அதை மாற்றிவிட்டால், அடுத்தடுத்த பிராசஸ்கள் எளிதாக நடந்துவிடும்.

சம்பளத்தைத் தாண்டி, முதலீடு போன்ற வருமான வைத்திருந்தீர்கள் என்றால், வருமான வரிக் கணக்கு வலைத்தளத்திலேயே இருக்கும் 26 AS, AIS-ல் தெரிந்துகொள்ளலாம்.

Source link