50% எடை குறைவு… 100% அதிக பாதுகாப்பு! BPCL,HPCL அறிமுகப்படுத்தும் புதிய ‘காம்போசிட்’ சிலிண்டர்கள்!

மேலும் சாதாரண உருளைகள் கனமான இரும்பினால் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த ‘காம்போசிட்’ உருளை மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதில் ஃபைபர் கிளாஸ் (fiberglass) மற்றும் உயர்தர பாலிமர்கள் பயன்படுத்தப்படுவதால் துருப்பிடிக்கும் பிரச்சனை இல்லை. எனவே, தரையில் துரு கறைகள் படியும் அபாயமும் இல்லை. பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் மட்டுமல்லாது, இதன் வடிவமைப்பும் மிகவும் நவீனமானது என்பதால் மாடுலர் கிச்சனிலும் இதை மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை

மேலும் இரும்புச் சிலிண்டர்களை விடக் கலப்புப் பொருள் (composite) சிலிண்டர்கள் மிகவும் பாதுகாப்பானவை. மேம்பட்ட பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வால்வு மற்றும் சீலிங் (sealing) அமைப்பு, எரிவாயு கசிவுக்கான வாய்ப்பை வெகுவாகக் குறைக்கும் வகையில் அதாவது அதிக வெப்பநிலையில் வெடிப்பு அபாயத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டாலும், சாதாரண இரும்புச் சிலிண்டர்களைப் போல இவை வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதில்லை. இதன் உறுதியான ஃபைபர்-கிளாஸ் (fiberglass) அமைப்பு காரணமாக, கீழே விழுதல் அல்லது பலமான மோதல் போன்ற சூழல்களை தாங்கிக்கொள்ளும் வகையில் உள்ளது.

அத்துடன் உள்ளே எவ்வளவு எல்பிஜி உள்ளது என்பதை நேரடியாகப் பார்க்கும் வசதி இந்த புதிய தொழில்நுட்பத்திலான சிலிண்டரின் மிகப்பெரிய நன்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டரின் நடுப்பகுதி ஒளி ஊடுருவக்கூடியதாக இருப்பதால், எரிவாயுவின் அளவை எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. முன்பெல்லாம், இரும்புச் சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை அறியும் வழி தெரியாமல் எப்போது எரிவாயு தீரும் என்ற அழுத்தத்தில் இருந்து தீர்வு கிடைத்துள்ளது. இப்போது பயனர்கள் எரிவாயு தீரும் தருவாயை எளிதாக அறிந்துகொண்டு, சரியான நேரத்தில் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.

Source link