நீட் தேர்வுக்கு எதிராக போராட முயற்சி; பாடகர் தெருக்குரல் அறிவு சென்னையில் கைது

சென்னை தலைமை செயலகத்தில் நுழைய முயன்ற எஞ்ஜாயி என்சாமி பாடல் புகழ் தெருக்குரல் அறிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 

கடந்த 2019-ம் ஆண்டு தெருக்குரல் என்ற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமானவர் அறிவரசு. தெருக்குரல் அறிவு என்று அழைக்கப்படும் இவர், 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். இந்த படத்தில், உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதியிருந்தார். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை, சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன், பட்டாஸ், நாடோடிகள் 2, சூரரைப்போற்று, உள்ளிட்ட் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். 

குறிப்பாக இவர் எழுதி, சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து இசையமைத்த எஞ்ஜாயி என்சாமி என்ற பாடல் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கடைசியாக சமீபத்தில் வெளியான பிளாஸ்ட் படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்த தெருக்குரல் அறிவு, தற்போது சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அத்துமீறி நுழைந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்த முயற்சி செய்ததாக கூறி, அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர், 

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றதை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரையும் அவருடன் இருந்த நண்பர்களையும் கைது செய்துள்ளனர். 

Source link