சென்னை: தமிழகம் 7997 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளித்துணிகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடத்தை

சென்னை: தமிழகம் 7997 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளித்துணிகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் ஏற்றுமதி- இறக்குமதி விவரங்கள் குறித்து ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய ஏற்றுமதி- இறக்குமதிகளை பதிவு செய்யும் நிர்யாத் நிறுவனம் 2024-25ம் ஆண்டுக்கான ஜவுளி ஏற்றுமதிகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, தமிழகம் 7997 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளித்துணிகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி. குஜராத்தையும், மஹாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழகம் முதலிடம்; 2020-2021ல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகம் மட்டுமே 21.84%. இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, மத்திய அரசு. சாதனைகளைச் சொல்லி ஒன்றாக வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link