போராட்டத்தில் வன்@றை; அபிஜித் தீப்கே சூளுரை

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன் வைத்துக் கரப்பான் பூச்சி கட்சி கடந்த மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறது. 

நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருப்பதாகக் கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலையில் அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்றனர். 

இந்நிலையில், இவர்களைத் தடுக்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அதே போல, நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் துணை ராணுவப்படையையும் டெல்லியில் களமிறக்கப்பட்டது.  

இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீபக் கூறுகையில், ” டெல்லி காவல்துறையினர் நேற்று குழந்தைகளை எவ்வளவு கொடூரமாகவும்,  வன்முறையுடனும் தாக்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். 12 வயது சிறுமிகளின் தலைகள் உடைக்கப்பட்டன. ஆண் காவல் அதிகாரிகளே இதைச் செய்தனர். அவர்கள் டெல்லி காவலர் சீருடை அணிந்த குண்டர்கள். 

அவர்கள் எங்கள் பேரணியைத் தடுக்க விரும்பியிருந்தால், நீர்ப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இங்கே கூடியிருந்தவர்கள் 17-18 வயதுடைய குழந்தைகள் தான். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமைதியாக அமர்ந்திருந்தோம். எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நேற்று, டெல்லி காவல்துறையிடமிருந்தே முதல் தாக்குதல் தொடங்கியது. அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினர்.  

டெல்லி காவல்துறை ஒரு பறவையைக் கூட இங்கே சிறகடிக்க விடுவதில்லை. எங்கள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில், ஜந்தர் மந்தர் பகுதியில் கற்கள் நிரம்பிய லாரிகள் எங்கிருந்து வந்தன? இதற்கு டெல்லி காவல்துறை பதிலளிக்க வேண்டும்” என்று பேசினார்.   

தொடர்ந்து பேசிய அவர்,  அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் பிள்ளைகள் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த அடக்குமுறைகளுக்கு எல்லாம் அஞ்சாமல் எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.  

Source link