இதனால், 40 அடி உயரத்தில் இருந்த விழுந்த அந்த இளைஞர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்த அந்த இளைஞர் தாண்டேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கை, கால் மற்றும் இடுப்பு உள்ளிட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், ”போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் விடுதி நிர்வாகம் சாகச விளையாட்டு நடத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விடுதி நிர்வாகம் சார்பில், ”எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துவிட்டது. அதற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவுகளையும் ஏற்கிறோம். சம்பவத்தின் போது உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
