திரிணமுல் அதிருப்தியாளர்கள் பாஜவில் இணைந்தால் மகிழ்ச்சி: சொல்கிறார் மம்தா

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் விலகியவர்கள் பாஜவில் இணைய வேண்டும் என சவால் விடுகிறேன். அப்படி இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என மம்தா பானர்ஜி பேசினார்.

கோல்கட்டாவில் தியாகிகள் தின நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எனக்கு ஈகோ கிடையாது. மற்ற கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து பாஜவிற்கு எதிராக ஒன்று சேர வேண்டும்.இந்த மேடையை குண்டர்கள் தாக்குகின்றனர். இந்த நிகழ்ச்சியை தடுக்க குண்டர்கள் அனுப்பப்படுகின்றனர்.அதிருப்தியாளர்கள் பாஜவில் இணைய வேண்டும் என சவால் விடுகிறேன். அதில் எனக்கு பிரச்னை இல்லை. உண்மையில் அப்படி நடந்தால் மகிழ்ச்சி அடைவேன். அவர்களின் இடங்களை நிரப்ப பலர் இங்கு உள்ளனர். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.

டில்லியில் நேற்று நடந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். மாணவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பிரதமர் வந்த வாகனம் வேறு பாதையில் சென்றதாக கேள்விப்பட்டேன். தேவைப்பட்டால் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தில் நான் பங்கேற்பேன். மேற்கு வங்கத்தில், பாஜவிற்கு எதிராக போராட இண்டி கூட்டணியின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எனக்கு ஈகோ கிடையாது. இவ்வாறு மம்தா பேசினார்.

Source link