பிரதமர் மோடி வீட்டின் முன்பாக திரண்ட காங்கிரஸார்: தீவிரமடையும் போராட்டம் – congress members including rahul gandhi stage a protest in front of pm modi residence

தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்றைய தினம் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்கப்படவில்லை. இதனால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளும் தொடர்ந்து நடத்தப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையில் இனிமேல் இதுபோன்று வினாத்தாள் கசிவு ஏற்படாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் பேரணியாகச் சென்றனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமாக எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு, மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்று பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக காங்கிரசார் வருகை தந்து முழக்கம் எழுப்பினார்கள். தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அமித் ஷா, நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என உள்ளிட்ட கோஷங்களை காங்கிரஸார் எழுப்பினார்.

இதனால் அந்த பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. முன்னதாக டெல்லியில் ஜந்தர் மந்தர் இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவில் முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினார்கள். அப்போது போலீஸ்காரர்கள் அவரை தடுத்து நிறுத்திய நிலையில் அவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இப்படியான நிலையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் பிரதமர் வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Source link