பிரியங்காவை காண காவல் நிலையம் வந்த சோனியா காந்தி!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன் வைத்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து நேற்று (20-07-26) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கினர். இதனால், இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கரப்பான்பூச்சி கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி இன்று (21-07-26) பேரணியாக சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதால், தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் அமர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில் அதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து  போராட்டம் நடத்தி வரும் ராகுல் காந்தியிடம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் சந்தித்து, போராட்டம் நடத்த வேண்டாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி, கேரளா, கர்நாடகா காங்கிரஸ் முதல்வர்கள், காங்கிரஸ் எம்.பிக்கள், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் போலீசாரால் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். 3 மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை காண அவரது தாயாரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி காவல் நிலையம் வந்தார். கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் விடுக்கப்படாத நிலையில் சோனியா காந்தி காவல் நிலையம் வந்து பிரியங்கா காந்தியை சந்தித்துள்ளார். 

Source link