தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் படை’யை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அதிரடிப்படை விரிவுபடுத்தப்பட்டு, குற்றத்தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆன்லைன் மூலம் ஆவணப் பதிவு (Anywhere Registration) கட்டாயமாக்கப்பட்டு, பொதுமக்களின் அலைச்சல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அரசு அலுவலகங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஊழல் புகார்கள் வந்தால் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை டி.ஐ.ஜி அலுவலகங்களிலும் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அதை நடைமுறைப்படுத்தினார்.
அதேபோல் கடந்த 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை. மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகளிரிடையே பெறும் வரவேற்பு பெற்றது. சொன்னது போலவே ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில் அந்த திட்டத்தை திமுக அமல்படுத்தியது.
