புதுடெல்லி
டெல்லியில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்பு துறையின் மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
அவர் மாநாட்டில் பேசும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளும், அதேபோன்று ஈரான் மற்றும் இஸ்ரேலும் இன்று மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
வருங்காலத்தில் போர் தளவாடங்களில் டிரோன்கள் மற்றும் டிரோன் ஒழிப்பு ஆயுதங்கள் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, டிரோன் உற்பத்திக்கான சுற்றுச்சூழலியலை நிறுவ வேண்டியது, இன்றைய காலகட்டத்தில் நாட்டுக்கு மிக அவசர தேவையாக உள்ளது.
அதில் நாம் முற்றிலும் சுயசார்புடன் இருக்க வேண்டும். இந்த சுயசார்பு என்பது உற்பத்தி என்றளவில் மட்டுமின்றி, உபகரணங்கள் அளவிலும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் என்றார்.
