நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரபல இசை கலைஞரான தெருக்குரல் அறிவு செவ்வாய்கிழமை தலைமைச் செயலகம் வெளியே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
நள்ளிரவில் வாலிபனாகும் டால்பின்… சாம்பல் நிறத்தில் பிறந்து; பிங்க் நிறத்தில் மாறுதாம்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவரை தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி புகுந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, முதலமைச்சர் விஜய் நேரம் கொடுத்த நிலையில் தெருக்குரல் அறிவு அதே காவல் துறை வாகனத்திலேயே தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பின் போது நீட் தேர்விற்கு எதிராக பல ஆலோசனைகளை தெருக்குரல் அறிவு வழங்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஆதவ் அர்ஜுனாவை மட்டுமே சந்தித்ததாக பாடகர் தெருக்குரல் அறிவு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.
நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி…
— Arivu (@Arivubeing) July 21, 2026
நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன். நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
