தொடர்ந்து பெய்துவரும் கனமழை; உயரும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை

அசாம் மாநிலத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மிகப் பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழைவெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை கிட்டத்தட்ட 11 மாவட்டங்களில்உள்ள வீடுகள், விளை நிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

 கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிர் இழந்துள்ளனர். இது வரை மொத்த உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ” 16 மாவட்டங்களில் மொத்தம் 5.6 லட்சம் மக்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளனர். மக்கள் முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்ரா, திகோவ், தேசாங் மற்றும் தன்ஸ்ரீ உள்ளிட்ட ஆறுகள் அதன் கொள்ளளவை எட்டியுள்ளன.  இதனால், பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, மாநில காவல்துறை, மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

Source link