தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தளபதி விஜய், தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் இந்த படம் ஆன்லைனின் திருட்டுத்தனமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக படத்தின் எடிட்டர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்சார் பிரச்னை எப்போது தீரும், படம் எப்போது வெளியாகும் என்று கடந்த 7 மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஜன நாயகன் ரிலீஸ் பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் 30 நாடுகளில் 8000-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 19-ந் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், ஆன்லைனின் வெளியானதால், தற்போது படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
Jul 22, 2026 10:57 IST
புக்மைஷோவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை
ஜன நாயகன் படத்தின் முன்பதிவு விற்பனையால் வர்த்தகத் துறை ஆச்சரியமடைந்துள்ளது . தாமதம் மற்றும் திருட்டுத்தனமாக ஆன்லைனின் வெளியாகி இருந்தபோதிலும், புக்மைஷோவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தொடக்கங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. இவை அனைத்தும் ஒரே மனிதருக்காக தளபதி விஜய் என்று இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Trade is surprised by the advance sales of #JanaNayagan. 730k+ tickets sold on BookMyshow, one of the biggest openings in Tamil cinema despite the delay and piracy. All for one man #ThalapathyVijay 💥🔥 pic.twitter.com/Q6al5ZgSUg
— Santhosh (@Santhosh5386195) July 22, 2026
-
Jul 22, 2026 10:55 IST
356 திரையரங்குகள் – 719 காட்சிகள் – 15458 டிக்கெட்டுகள் – அமெரிக்கா முன்பதிவு விபரம்
ஜள நாயகன் திரைப்படம் ரிலீஸில் வெளிநாடுகளில் ஆன்லைன் புக்கிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா பிரீமியர் இறுதி முன்பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை 280,693 டாலர் வசூலித்துள்ளதாகவும், 356 திரையரங்குகள் – 719 காட்சிகள் – 15458 டிக்கெட்டுகள். விற்பனை ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க பிரீமியரின் மொத்த முன்பதிவு 455,000 டாலர். பிரீமியர் நாளில் 600,000 முதல் 700,000 வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஜன நாயகன் திரையிடப்படுகிறது என வெங்கி பாக்ஸ் ஆபீஸ் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது,
#JanaNayagan USA Premiere Final Advance Sales🇺🇸:
$280,693 – 356 Locations – 719 Shows – 15458 Tickets
Total North America Premiere Advances at $455K. Trending towards a $600K-$700K+ premiere day. Premieres Tomorrow! pic.twitter.com/maoSJtJtia
— Venky Box Office (@Venky_BO) July 22, 2026
