ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி-யி ல் கிரைம், திரில்லர், ஆக்ஷன் என பல ஜானரில் பல படங்கள் வெளியாகுகிறது. ஒவ்வொரு வீக் எண்டும் ஓ.டி.டி-யில் என்ன திரைப்படம் ரிலீஸாகப் போகிறது என்பதை ஆர்வமாக எதிர்நோக்கியே பலர் உள்ளனர். அப்படி இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணக் கூடிய ஓ.டி.டி ரிலீஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நள்ளிரவில் வாலிபனாகும் டால்பின்… சாம்பல் நிறத்தில் பிறந்து; பிங்க் நிறத்தில் மாறுதாம்
கான்சிட்டி
அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கான்சிட்டி. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்திருந்தார். இப்படம் வரும் 24-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாக உள்ளது. மிஸ் பண்ணாம குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
கட்டா குஸ்தி 2
செல்ல அய்யாவு எழுத்து மற்றும் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’ . 2022-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாக்கப்பட்டது. இப்படம் வரும் 31-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.
பாலன் தி பாய்
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாலன் தி பாய்’. இப்படத்தில் ஆதிசேஷன், கே.ஆர்.ஃபர்சானா, பாலதிங்கல், முஹம்மது ஜினான், டொவினோ தாமஸ், கிரிஷ் ஏ.டி, ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 31-ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதயம் முரளி
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இதயம் முரளி’. இப்படம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாக உள்ளது.
