சென்னை: முன்ஜாமின் வழங்கியும் தற்போது வரை சரண் அடையாதது ஏன் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
தவெக எம்.எல்.ஏ வை பேரம் பேசி ஆட்சி கவிழ்க்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
முன்ஜாமின் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
”முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
