நைட்டுல வேற லெவல்… ஆனா பகல்ல செம பக்தி; இந்த தேவதையின் நகரத்தில இத மட்டும் பண்ணிறாதீங்க இந்தியர்களே

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக் (Bangkok), உலகின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றாகும். நவீன வானளாவிய கட்டிடங்கள், பழமையான பௌத்தக் கோயில்கள், துடிப்பான இரவு வாழ்க்கை மற்றும் ருசியான ஸ்ட்ரீட் ஃபுட் ஆகியவை ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு அற்புதமான நகரம் இது. உள்ளூர் மொழியில் இந்நகரத்தை ‘க்ருங் தேப்’ (Krung Thep) என்று அழைக்கிறார்கள். அதற்கு “தேவதைகளின் நகரம்” என்று பொருள்.

மனுஷன மனுஷனா பாப்பாங்க… சி.இ.ஓ-வே ட்ரெயின்ல தான் போவாரு; ஜப்பான் ஆபீஸ் ரகசியங்களை உடைத்த இந்தியர்

பார்க்க வேண்டிய இடங்கள்

தி கிராண்ட் பேலஸ் (The Grand Palace) : தாய்லாந்து ராஜாக்களின் அரண்மனை. இதன் கட்டிடக்கலை காண்போரை வியக்க வைக்கும்.

வாட் அருண் (Wat Arun – Temple of Dawn): சாவோ பிராயா நதிக்கரையில் அமைந்துள்ள மிக அழகான பௌத்தக் கோயில்.

வாட் போ (Wat Pho): பிரம்மாண்டமான ‘படுத்துக்கொண்டிருக்கும் புத்தர்’ (Reclining Buddha) சிலை உள்ள இடம்.

சாவோ பிராயா நதிப் பயணம் (Chao Phraya River Cruise): மாலையில் இந்த நதியில் மிதவைப்படகில் சென்று இரவு உணவருந்துவது தனி அலாதி அனுபவம்.

செல்ல சிறந்த நேரம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் வானிலை மிகவும் இதமாக இருக்கும். கோயில்களுக்குச் செல்லும்போது தோள்கள் மற்றும் கால்களை மூடும் அளவிலான கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும்.

இந்தியர்கள் என்ன செய்யக் கூடாது?

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியப் பயணிகள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு செல்கின்றனர். பாங்காக் இந்தியர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் விருப்பமான இடமாக உள்ளது. நீங்கள் பாங்காக் சென்றால் அங்குள்ள அரச குடும்பத்தினரை அவமதிக்காதீர்கள். 

நீங்கள் தாய்லாந்து அரச குடும்பத்தினரை அவமதித்தால் சிறை செல்ல நேரிடும். தாய்லாந்தில் மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகிறார்கள். அங்கு புத்தர் சிலைகளை அவமதிக்காமல் பார்த்துக்கொள்ளவும். புத்தர் சிலைகளை தொடுவது அல்லது அதன் மீது அமர்வது மரியாதை குறைவாக கருதப்படுகிறது. 

தாய்லாந்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ளன. நீங்கள் அதை உட்கொண்டாலோ அல்லது கடத்தினாலோ உங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மறந்தும் கூட போதைப் பொருட்களை எடுத்துவிடாதீர்கள். 

Source link