பாறைகளில் அம்மோனியா வாயு கசிவு; சுரங்கத்தில் சிக்கிய 25 நபர்கள்

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விபத்து அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நீர் மின் சக்தி துறையால் சுரங்கப்பாதை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் கடந்த திங்கள் அன்று வழக்கம் போல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாகச் சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.   

இந்நிலையில், இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த 27 பேரில் இருவர் தப்பினர். மீதமுள்ள 25 பேரும் சுரங்கத்தில் சிக்கினார். அப்போது,  அம்மோனியா வாயு கசிந்ததால், அவர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, சம்பவம் அறிந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மீதமுள்ள 13 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.  

மீட்கப்பட்டதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், மற்றவர்கள் மேற்குவங்கம், உத்தரகண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம், பாறைகளில் இருந்த அம்மோனியா வாயு கசிவின் காரணமாக  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் வழிகள் அடைக்கப்பட்டன. இதனால், உள்ளே சிக்கிய பணியாளர்கள் வெளியேற முடியாமல் சுரங்கத்திற்குள் சிக்கினர் என்று கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் சுரங்கப் பாதையின் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. டீஸ்டா நதியில் இருந்து நீர் மின் நிலையத்திற்கு நீரை எடுத்துச் செல்லும் வகையில், இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் பாறையில் இருந்த அம்மோனியா வாயு கசிவால் இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும், இது குறித்து அம்மாநில முதல்வர் கூறுகையில், ”இந்த சம்பவம் நடந்ததற்கான முழுமையான காரணம் இதுவரை கடந்தறியப்படவில்லை. காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளோம். முழுமையான காரணம் வெளியான பின்பே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.  

Source link